ஆரம்பகால கட்டத்தில் எல்லோரையும் கழுவி கழுவி ஊற்றிய பிளாக்‌ஷிப் யூடியூப் குழுவினர், தங்களுடைய ஓடாத படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடியிருக்கிறார்கள். இதையெல்லாம் வீடியோ பண்ண மாட்டீங்களா மிஸ்டர் பிளாக்‌ஷிப்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. பிளாக் ஷீப் யூடியூப் குழு மொத்தமாக களமிறங்கி உருவாக்கிய படம். டிவி வர்ணனையாளர் ரியோ இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியாவிலேயே ஒரு யூடியூப் குழு படம் இயக்குவது இதுவே முதல் முறை எனப் பேசப்பட்டது. மேலும் தமிழகத்தில் இவர்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. அதனால் இவர்கள் உருவாக்கிய படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் இப்படம் ரிலீஸானது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் படம் அமெச்சூர்த்தனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. படத்தில் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஆக்கம் என அனைத்த்திலும் இந்தப் படம் சொதப்பியுள்ளாதாக விமர்சகர்கள் கூறினார்கள். ரசிகர்களும் படத்தை நிராகரித்தார்கள். கிடைத்த வாய்ப்பை யூடியூப் குழு கோட்டை விட்டு விட்டது என்றே கூறப்பட்டது. இப்படம் மிகப் பெரிய தோல்விப் படமாக கருதப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் இப்படத்தின் வெற்றி விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

திரை உலகத்தினரிடையே இது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதன்முதலாக உருவான படம் கனா. அப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றது. அப்படத்திற்கு ஷீல்டு கொடுத்து பாராட்டு விழா கொண்டாடினாரகள். ஆனால் இப்படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடுவது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்படத்திற்கு ஷீல்டு எல்லாம் எதுவும் தரப்படவில்லை. மேடையில் படக்குழு தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டார்கள்.

சிவகார்த்திகேயன் அமைதியாகவே இருந்தார். ஆனால் இப்படத்தில் நடித்த மூத்த நடிகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. மூத்த நடிகர்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவும் இல்லை, கௌரவிக்கப்படவும் இல்லை. இதுவும் ஏன் என தெரியவில்லை. தயாரிப்பாளர் விநியோகஸ்தரகளுக்கு சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் லாபம் ஈட்டி தந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. சிவகார்த்திகேயன் படம் போல் இல்லை என பேசப்பட்ட போது பகிரங்கமாக அதை தன் தோல்வி என ஒப்புக்கொண்டார் சிவகார்த்திகேயன். ஆனால் அவரே இப்போது தன் தயாரிப்பில் தயாரான படத்திற்கு வெற்றி விழா கொண்டாடியுள்ளார். யு டூ சிவகார்த்தியேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here