தமிழ் சினிமாவில் தற்போது அதீத எதிர்பார்ப்பில் உள்ள படம் நேர் கொண்ட பார்வை. விஸ்வாசம் படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் நேர் கொண்ட பார்வை. தற்போவது இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தல ஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் புகழ்பற்ற இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் பிங்க். அந்தப் படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை.

முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க். முழுக்க பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் அமிதாப் மிகச்சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமே!. ஆனால் அது தான் இப்போது நேர் கொண்ட பார்வை படத்தின் ரிலீஸிற்கு சிக்கலாக அமைந்துள்ளது.

ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தது முதல் அஜித்துடன் நல்ல நட்பில் இருந்தவர் ஸ்ரீதேவி. அஜித்தை வைத்து தமிழில் தான் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது அவர் ஆசை. அவர் தான் பிங்க் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவரது திடீர் மரணத்திற்கு பிறகு போனி கபூர் அஜித்திற்காக பிங்க் படத்தின் உரிமையை தமிழில் வாங்கினார்.

இந்திப்படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தின் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்‌ஷன் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாபாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் ரிலீஸ் வேலைகள் ஆரம்பித்த நிலையில் போனி கபூர் படத்திற்கு அதிக விலை கூறியதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அஜித் படங்களில் அதிக வசூலை குவித்த படம் விஸ்வாசம் தான். அந்தப் படத்தின் விலையை விட அதிக விலை கூறுவதால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இப்படத்தில் அஜித் கௌரவ தோற்றம் என்பதால் அவர் வரும் பகுதியானது சிறிது நேரமே என்பதாலும் இப்படம் தகுந்த வரவேற்பை பெறுமா என்ற சந்தேகத்தில் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இதனாலும் இப்படத்தின் வியாபாரத்தில் பிரச்சனைகள் எழுந்துள்ளது.

படக்குழு இதை மறுத்தது. அஜித் இப்படத்தில் முழுக்க வருவார் எனவும் அவர் கேரக்டர் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுடனான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டதாக படக்குழு கூறியது. இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 10 என்று முன்பு கூறப்பட்ட நிலையில் படம் ஆகஸ்ட் 1 அன்று வருவதாக படக்குழு கூறியிருந்தது. இந்நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ள இப்படத்தின் வியாபார பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here