பாரத் சினிமா மதிப்பீடு : 3.5/10
வாசகரின் சராசரி மதிப்பீடு : 4/10
நடிகர்கள் : விஜய் சேதுபதி,அஞ்சலி,விவேக் பிரசன்னா,சூர்யா விஜய் சேதுபதி,லிங்கா
சினிமா வகை : ஆக்‌ஷன், த்ரில்லர்.

கரு: லைலாவை தேடி ஏழுகடல் ஏழு மலை தாண்டி அலையும் சிந்துபாத் போல் தன் காதல் மனைவியை தேடி நாடு விட்டு நாடு போய் படாதபாடு படும் சிந்துபாத்தின் கதை தான் இது.

கதை: ஊரில் சிறு சிறு திருட்டுக்கள் முலம் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அனாதை அண்ணன் தம்பி அவரகளின் உண்மைக்கதை யாருக்கும் தெரியாது. (இயக்குநர் உடபட )காது கேட்காத அண்ணன் எதேச்சையாக கத்திப்பேசும் அஞ்சலி மீது காதலில் விழ அந்தக்காதல் அவரை எதுவரை இழுத்து செல்கிறது என்பது தான் படம்.

விமர்சனம்: ஒரு ஆக்‌ஷன் மசாலா என முதலிலேயே பிளான் செய்துவிட்டு தான் படமெடுத்திருக்கிறார்கள்.ஆனால் அதற்கான பரபர திரைக்கதை இல்லை. விஜய் சேதுபதி என மிகப்பெரும் பலம் கதையில் இருக்கிறது. ஏழு மலை ஏழு கடல் தாண்டி கதை தான். ஆனால் படத்தின் ஆரம்பத்திலிருந்தே எங்கோ ஏதோ சரியில்லை என்ற உணர்வு வந்துவிடுகிறது. பின்னனிக்கு, அதன் விவரங்களுக்கு என படு பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் அத்தனையும் விழழுக்கு இறைத்த நீராக மாறிவிட்டது. ஒரு ஆகஷன் மசலா படமே ஃபேண்டஸி கதை தான். அதிலும் இந்தக்கதையின் அடிநாதமே சிந்துபாத் கதைதான் அதில் லாஜிக் என்பது தேவையில்லை ஆனால் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்குள் மேஜிக் நிகழ்ந்து நாம் அப்போது எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆனால் இந்தப்படத்தில் படம் முழுதுமாக ஒவ்வொரு காட்சியிலும் இது இப்படி எப்படி நடக்கும் என்கிற கேள்வி தொற்றிக்கொள்கிறது. அதனாலேயே படம் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு போகிறது.

விஜய் சேதுபதி அவரது வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். சில இடங்கள் மாஸாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அது சரியாக ஒட்டவில்லை. அவரால் அது எப்படி முடியும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா எதற்கு என்பதே தெரியவில்லை. படத்தில் அவர் என்னதான் செய்கிறார். அவர் கேரக்டரை அப்படியே தூக்கிவிட்டு எடுத்தாலும் படம் அப்படியே இருக்கிறது. அஞ்சலி வரவர அழகாகிக்கொண்டே போகிறார். அவரது நடிப்பு தான் இந்தபடத்தின் ஒரே ரிலிஃப். வில்லனாக வருபவர், விவேக் பிரசன்னா ஆகியோரின் கடும் உழைப்பு மொத்தமாய் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

அருண்குமார் இயக்கத்தில் முன் வந்த இரண்டு படங்களும் கமர்ஷியல் படங்களே ஆனால் அதில் படம் முழுதும் ஒரு உயிர் இருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு எமோஷன் நம்மை இழுத்து செல்லும் இந்தப்படத்தில் அது வலிந்து எழுதப்பட்டதாய் தெரிகிறது. உணர்வுகளில் உண்மையில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இசை யுவன் சங்கர் ராஜா பாடல்கள் அனைத்தும் தாலாட்டு. நெடுநாட்கள் கழித்து கேட்டாலும் மனதில் மயிலிறகை வருடும். எடிட்டிங் ரூபன் மாண்டேஜாக வரவேண்டிய காட்சிகள் விரிவாய் வருகிறது. விரிவாய் வர வேண்டியது மாண்டேஜில் வருகிறது. கேமரா சண்டைக்காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருக்கிறது. அந்த ஒளி அமைப்பு பிரமாதம் ஆனால் அது மனதில் ஒட்டவில்லை என்பது தான் மைனஸ்.

பலம்: விஜய் சேதுபதி, அஞ்சலி காம்பினேசன், அவர்களது நடிப்பு.

பலவீனம்: எழுத்து, ஒட்டாத லாஜிக் அற்ற திரைக்கதை. உணர்வில்லா காட்சிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here