இயக்குநர் இமையம் பாரதிராஜா தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தமிழக அரசு அமைத்த குழுவின் சார்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த வாரம் க்யூப் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்த்ததன் மூலம் நற்பெயர் பெற்றார். விஷால் தலைமை சரியில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவரது செயல்பாடுகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சினிமா உலகில் அனைவரும் பாரதிராஜாவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதனால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், இயக்குநர் சங்கத்திற்கும் தலைவராக செயல்படும் நிலை ஏற்பட்டது.

நடிகர் விஷால் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதவியில் இருந்தது பெரும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்க எதிரணி விஷாலின் செயல்பாடுகளில் அதை முக்கிய குற்றச்சாட்டாக முன்னிறுத்தினார்கள். விஷாலை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பாரதிராஜா குழு வந்த நிலையில் பாரதிராஜா இரட்டைப் பதவியில் இருப்பது மீண்டும் பிரச்சனையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து தற்போது இயக்குநர் சங்கப் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாரதி ராஜா.

கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்கப் பொதுக்குழுவில் , நமது சங்க நிர்வாகிகள், இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னைத் தலைவாராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டால்அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன் ஒரு மூத்த இயக்குநராகநமது சங்க வளர்சசிற்கும் உறுப்பினர்களின் எதிர்காலத்திற்கும் எனது வழிகாட்டுதலும் பேரன்பும் எப்போதும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அவர் இயக்குநர் சங்கப்பதவிக்கு போட்டியிடுவரா? மாட்டாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here