ஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.
முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார். இதில் ஏற்கனவே ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. விஜய் ஹீரோ ஆனால் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ளனர். இதனால் முதல்வன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜயை வைத்து எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அர்ஜுன் நடிக்கிறார்? இதற்கான கால்ஷீட்டும் விஜய் தரப்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என கூறப்படுகிறது. வில்லன் கேரக்டர் இதுதொடர்பாக அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லனாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குணச்சித்திர வேடத்திலாவது அர்ஜுன் நிச்சயம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர் முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here