பாரத் சினிமா மதிப்பீடு: 3.5 / 5
வாசகரின் சராசரி மதிப்பீடு: 3.5 / 5
நடிகர்கள்: கிஷோர்,ஸ்ரீரஞ்சனி,லவ்லின் சந்திரசேகர்,கிஷோர் டிஎஸ்
சினிமா வகை : காதல்

கதை: சென்னை பெரு வெள்ளத்தின் போது உணமையில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிக்கு நடந்த உண்மை கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட காதல் திரைக்கதை.

சென்னை பெருவெள்ளத்தின் முந்தின இரு நாட்களில் மழை வானத்தை பொத்துக்கொண்டு பெய்திருக்க அடைப்பட வீட்டினுள் அல்சைமர் வியாதியினால் பாதிக்கப்பட்டு 20 ஆண்டு நினைவுகளை இழந்து தவிக்கும் கணவனை பார்த்துக் கொள்ளும் மனைவியின் கதை. மனையியைக்கூட அடையாளம் தெரியாத கணவன், அளவிளாத அபரிதமான காதல் கொண்ட மனைவி, நினைவில் தன் இளம் மனைவியோடு வாழும் கணவன் இவர்கள் இருவருக்குள் நடக்கும் காதல் சம்பவங்கள் மழை அவரகளுக்கு தரும் பிரச்சனைகள் அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் இது தான் கதை.

விமர்சனம்: வாழ்வில் எது முக்கியம் சந்தோஷம். அது எப்படி கிடைக்கும் அன்பின் மூலம். அன்பே உலகின் அடிப்படை. ஆனால் அன்பை கொடுப்பதில் நமக்கு ஏன் இத்தனை கஞ்சத்தனம். அதை அளவெடுத்து தான் அனைவரிடமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யார் மீது நாம் அன்பை அளவிலாமல் எதிர்பார்ப்பில்லாமல் தருகிறோம் யோசித்துப் பாருங்கள் காதலிடம். குடும்பத்திடம். ஆனால் இன்றைய உலகில் கணவன் மனைவியிடம் கூட அந்த எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு இல்லை.

சென்னை பெரு வெள்ளத்தின் போது நம் அத்தனை மனங்களிலும் பொங்கி வழிந்தது ஒரு அன்பு. பெயர் தெரியாத முகமே அறியாத நபர்களுக்காக எந்த உதவியும் செய்ய நாம் தயாராக இருந்தோம். ஆனால மழை வடிந்த பின் அன்பும் நம்மிலிருந்து வடிந்து விட்டது.

சென்னை மழை வெள்ளத்தின் மழை நாட்களில் ஒரு வயாதான தம்பதியினிடையே நாம் தற்போது தொலைத்திருக்கும் எதிர்பார்ப்பில்லா அளவில்லா அன்பு தான் இந்த மொத்த படமும். அதை அன்பு பொங்க அவர்களின் பிரச்சனையை, அவர்களின் காதலை, சென்னையின் மழை நாட்களை நம் கண் முன் கொண்டு வந்தததில் ஜெயித்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டுக்குள் தான் மொத்தப்டமும் இருவர் மட்டும் தான் ஆனாலும் நம்மை நகர விடாமல் அவரக்ளிம் காதல் இழுத்துக்கொள்கிறது. அலசைமர் நோயாளியாக நொடியில் மறந்து பேசியதையே திரும்ப திரும்ப பேசும் பாத்திரம். கொஞ்சம் பிசகினாலும் ஓவர் ஆக்டிங் ஆகிவிடக்கூடியதை அழகாய் கச்சிதமாய் நம் முன் கொண்டு வந்துள்ளார் கிஷோர். ஶ்ரீரன்சனியை டான்ஸ் ஆட அழைத்து பின் தள்ளி விடுவதும், பெட்டில் திடீரென முழித்து ஶ்ரீரன்சனியை உதைத்து தள்ளும் இடங்களில் மனிதர் பாத்திரத்தை உண்மையாக்கிவிடுகிறார். தன் இளமை காதல் நினைவுகளை நினைத்து ஏங்கும் இடங்கள் அழகு. தன் மனைவியிடமே மனைவியை பற்றி சொல்வது என மனிதர் பின்னுகிறார்.

ஶ்ரீரஞ்சனி இதி லைஃப் டைம் கேரகடர். இப்படியான பாத்திரம் அவர் வாழ்வில் திரும்ப கிடைக்காது. அத்தனை அன்பையும் கொட்டித் தீர்க்கிறார். நமக்கே எரிச்சல் வரும் இடங்களிலும் கணவனை ஒரு நொடியில் மன்னித்து அன்பை பொழிவது அத்தனை அழகு. இப்படியும் அன்பு இருக்க முடியுமா என ஆச்சர்யபட வைக்கிறது ஶ்ரீரஞ்சனியின் அன்பு.

இருவருக்குள்ளும் நிகழும் சண்டைகளும் காதலும் தான் படம் அதை இருவரும் அழகாய் கொண்டு வந்துள்ளார்கள். ப்ளாஷ்பேக்கில் இளம் ஜோடிகளாய் வரும் கிஷோர் லவ்லின் அத்தனை அழகு. அந்தக் காதல் காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் விதமும் அத்தனை அழகு. அந்த்கதைதாம் முதிர் தம்பதியின் காய்ந்த போகாத அன்பின் காரணம். அதனால் அவை வெகு முக்கியமாய் மாறிவிடுகிறது. இளம் ஜோடிகள் இருவரும் பாந்தமாய் அந்த காதலை கொண்டுவந்துள்ளார்கள்.

பல இளம் இயக்குநர்களுக் கூட கைவராத காட்சிமொழி லட்சுமி ராமலிகிருஷ்ணனுக்கு கைவந்திருக்கிறது. திரைக்கதையை அவர் திரையில் கொண்டு வந்திருக்கும் விதமும் அதற்கு படக்குழுவின் ஒத்துழைப்பும் அசாத்தியம்.

பின்னனி இசை ஒரே வார்த்தையில் அற்புதம். மிக சின்ன சின்ன காட்சி துணுக்குகளிலும் இசை நம்மை அசரடிக்கிறது. கேமரா முழுக்க அதிகமாக க்ளொசப் மற்றும் கேரக்டர்களோடே நகரும் கோணங்கள். மிக கடினமான இறுதிக் காட்சிகளையும் மிக அற்புதமாய் படமாக்கியுள்ளது கேமரா. கலை லட்சுமி ராமகிருஷ்ணன் குழுவே செய்திருக்கிறது. இறுதிக்காட்சிகளில் தண்ணீரில் வீடு மூழ்கும் காட்சிகள் பிரமாண்ட படங்களின் உணர்வுகளை தாண்டிய பயத்தை நம்முள் விதைக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று ஒலிப்பதிவு படம் முழுதும் மழை பின்னனியில் பெய்து கொண்டே இருக்கிறது. அதை நம காதுகளில் சரியாய் அந்த பயத்தை தந்ததில் ஜெயித்துள்ளது ஒலிப்பதிவு . படத்தின் முழுப்பிராமண பின்னனி ஒரு வகையில் சராசரி ரசிகனை ரசிப்பை தடை செய்யும்.

பலம்: காதலும் அதை காட்டிய விதமும்

பலவீனம்: ஒரே வீட்டுக்குள் நகரும் கதை.படத்தில் காட்டப்படும் முழுப்பிராமணப் பின்னனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here