தமிழ்நாட்டில் விஜய் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் குவிக்கும் என்பது கணிப்பாக உள்ளது.
நடிகர் விஜய் அட்லி இயக்த்தில் நடித்துள்ள படம் பிகில். படத்தின் ஷீட்டிங்க் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்கப்பட்டதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நம் சமயம் செய்தியில் கடந்த 20 நாட்களுக்கு முன்னே அறிவித்தது போல் XGen Studio and United India Exporters ஆகிய நிறுவனம் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

பிகில் படத்திற்கான சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி ரூ. 55 கோடிக்கு வாங்கியது. மேலும் , இந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 30 கோடிக்கும் மேல் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளிநாட்டு உரிமம் ரூ. 25 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக விஜய்யின் சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூலை குவித்து இருந்தது. இதையடுத்து வெளியாகும் பிகில் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளியாகும் முன்னரே 100 கோடியை இப்படம் குவித்துள்ளது பெரும் சாதனையாகும். இதனால் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதைத் தாண்டி தமிழ்நாட்டு வசூலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ்நாட்டில் விஜய் படம் 100 கோடிக்கும் மேல் குவிக்கும் என்பது கணிப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here