பிக்பாஸ் வீட்டின் சொர்ணக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவுக்கும் இன்னொருவருக்கும் இடையே தினமும் சண்டை நடப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இன்று வனிதாவுக்கும் யாருக்கும் சண்டை என்பது மட்டுமே பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் வனிதாவும் மதுமிதாவும் மோதிக்கொள்கின்றனர். அபிராமியின் பாட்டில்-குழந்தை விவகாரம் இன்றும் பூதாகரமாக வெடித்தது. கட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வந்துட்டு ஒண்ணுமே தெரியாத ஊமக்குசும்பியா இருக்கியே என்று வனிதா, மதுமிதாவை எகிற அதற்கு ‘இதே வாய் தானே அன்னிக்கு ஆமாம் அவ ஓவராத்தான் போறான்னு சொல்லுச்சு’ என்று மதுமிதா பதிலடி கொடுக்க, அதற்கு வனிதா’ ஷட்டப் பண்ணு’ என்று சொல்ல, அதற்கு மீண்டும் மதுமிதா ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்று பதிலடி கொடுக்க இன்றைய முதல் புரமோவே காரசாரமாக இருந்தது
தன்னை வைத்து நடக்கும் சண்டையை அபிராமி அதிர்ச்சியுடன் இருவரையும் மாறி மாறி பார்க்க, இந்த சண்டையை இன்னொருபுறம் உள்ளுக்குள் சந்தோஷமாக மீராமிதுன் பார்க்க, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க என பிக்பாஸ் வீடு இன்று ஒரே களேபரமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here