ஊடகங்கள் என்பது மக்களுக்கு முக்கியமான நேரத்தில் செய்திகளை கொண்டு சேர்ப்பது, விழிப்புணர்வு ஊட்டுவது, தெளிய வைப்பது, தெரிய வைப்பதுதான். அதனால் தான் தனியார் தொலைக்காட்சிகளுக்கு சில கடுமையான வரையறைகளை வரையறுத்து வைத்திருந்தது செய்தி ஒலிபரப்புத்துறை. எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசு ஊடகங்களைத் தவிர தனியார் ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பு கூடாது என்பது கட்டாயமாக இருந்தது.

என்று இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டதோ, அன்றே செய்தி ஊடகங்கள் டிஜிட்டல் கட்டப்பஞ்சாயத்துக் கூடமானது. அதையும் கடந்து ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் தனியார் சேனல்கள் நடத்தும் அக்கப்போர் அனைத்தும் ஊடகத்துறை கண்காணிக்கிறதா…? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறதா என்பதே புரியவில்லை. குறிப்பாக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த வகையில் உதவப்போகிறது என்று கேட்டால் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

மக்களின் கவனத்தை சீர்குலைக்கும், மனோ நிலையை பாதிக்கும் இந்தமாதிரி ஷோக்களை கட்டுப்படுத்த செய்தித்துறை என்றுதான் நடவடிக்கை எடுக்கப்போகிறதோ என்று தெரியவில்லை.

கமலஹாசனை கருத்துகளை பின்பற்றி செல்ல ஒரு கூட்டமே தமிழகத்தில் இருக்கும் இந்தச் சூழ் நிலையில் இந்தக் கருமாந்திரத்தை தொகுத்து வழங்க எப்படித்தான் ஒப்புக்கொண்டாரோ என்பதுதான் புரியாத புதிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here