விக்ரம் மகன் துருவ் விக்ரம் முதன்முதலாக அறிமுகமாகும் படம் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு நேற்று டீசர் வெளியாகியுள்ளது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை முதன்முதலாக இயக்குனர் பாலா தான் இயக்கினார். ஆதித்ய வர்மா திரைப்படம் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் நேரடி தழுவல் படம் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பு பாலா இயக்கிய அந்தத் திரைப்படம் ஒரிஜினல் திரைப்படம் போல் இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், அந்தத் திரைப்படத்திலிருந்து பாலாவை நீக்கியது.
இந்த நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய கிரீஸய்யாவுக்கே தமிழ் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் கொடுக்கப்பட்டது. நீண்ட சர்ச்சைகளுக்கு நடுவே இந்தத் திரைப்படம் தற்போது நிறைவடைந்து நேற்று டீசர் வெளியிடப்பட்டது.
இந்த டீசர் தற்போது பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது அறிமுக நடிகர் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் டீசரானது ரிலீஸாகி 24 மணி நேரத்திற்குள் 24 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது என்பது நிச்சயம் ஆச்சர்யப்படும் விஷயம் தானே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here