என்னை அறிந்தால் படத்திற்கு பின் தான் பலரும் அருண் விஜய்யை மிகவும் லைக் செய்தார்கள் என்றால் அது மிகையாகாது. சாஹோ, அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும். இந்நிலையில் மனிதர் சமீபத்தில் தான் தனது அடுத்தப்பட “பாக்ஸர்” ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தார்.

இந்நிலையில் முன்பு கிசுகிசுத்து போலவே தான் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது. அசத்தல் ஆக்ஷன் படம் மாஃபியா. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர். துருவங்கள் 16 படப்புகழ் “கார்த்திக் நரேன்” இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.

பிரியா பவனி ஷங்கர் மற்றும் பிரசன்னா நடிப்பதை டீவீட்டில் உறுதி செய்துள்ளனர் தயாரிப்பாளர் தரப்பு. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here