ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், ராஜ்கமல் நிறுவனம் துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. ஆனால் இதுபோல் அமையும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்து இருக்கிறது. என் முயற்சிகள் எல்லாமே எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் உபயோகப்பட வேண்டும்.

மீரா படம் வெளிவந்த போது விக்ரம் சிறப்பாக வருவார் என்றே சொன்னேன். சேது படம் விக்ரமுக்கு முன்னதாக வர வேண்டிய படம்.

கடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

சீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு அரசாங்கம் அமையும் அளவிற்கு நாங்கள் படம் எடுப்போம். ராஜ் கமல் இனிமேல் சிறந்த படங்களை தயாரிக்கும்.

ஜூலை 19-ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறோம். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.

நல்ல படத்தை ஓட்டிக் காட்டுங்கள். தமிழ் திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here